×

மக்களவை தேர்தல் தேதி நாளை பிற்பகல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி: மக்களவை தேர்தல் தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்து இன்று ஆலோசனை நடந்தது. மக்களவைத் தேர்தல் தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. காலையில் 45 நிமிடம் நடந்த கூட்டத்தில் எத்தனை கட்டங்களாக, எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மக்களவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். புதிய தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசித்தார். மக்களவை தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு இடைத்தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று ஏர்பார்க்கப்படுகிறது.

 

The post மக்களவை தேர்தல் தேதி நாளை பிற்பகல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Election Commission ,Delhi ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...